குடியரசு துணைத் தலைவராக ஜெகதீப் தன்கர் தேர்வு-தலைவர்கள் வாழ்த்து

குடியரசு துணைத் தலைவராக ஜெகதீப் தன்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் டுவிட்டரில் வெளியிட்ட வாழ்த்துச்…

குடியரசு துணைத் தலைவராக ஜெகதீப் தன்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் டுவிட்டரில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “குடியரசு துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜெகதீப் தன்கருக்கு வாழ்த்துகளும் வாழ்த்துகளும். மேல்சபையில் ஜனநாயக விவாதங்களை வலுப்படுத்துவதோடு, நமது அரசியலமைப்பில் பொதிந்துள்ள இலட்சியங்கள் உங்கள் பதவிக் காலத்தில் நிலைநிறுத்தப்படும் என்று நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“ஜெகதீப் தன்கருக்கு வாக்களித்த அனைத்து எம்பிக்களுக்கும் நன்றி. இந்தியா 75வது சுதந்திர தினம் கொண்டாடும் நேரத்தில், சிறந்த சட்ட அறிவும் அறிவுத் திறனும் கொண்ட விவசாயி மகனை துணைத் தலைவரைக் கொண்டிருப்பதில் பெருமிதம் கொள்கிறோம்”  என்றார் பிரதமர் மோடி.

நம் இந்திய திருநாட்டின் துணை குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெகதீப் தன்கர் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று  தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவராக ஜெகதீப் தன்கர் அவர்கள் தேர்வு பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.ஜெகதீப் தன்கர் அவர்கள் தேசம் வளர்ச்சிப் பாதையில் செல்வதற்கும் வெகுமக்களின் நலன் காப்பதிலும் உறுதுணையாக இருப்பார் என்பதில் ஐயமில்லை. அவருக்கு எனது சார்பிலும் புதுச்சேரி மக்களின் சார்பிலும் மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.