முக்கியச் செய்திகள் செய்திகள்

“தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்” : மு.க.ஸ்டாலின்

தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தேர்தல் பரப்புரையின் போது விதிகளுக்கு மாறாக அவதூறு பரப்பும் வகையில் பேசியதாக கூறி இன்று மதியம் 12 மணிவரை தேர்தல் ஆணையம் பரப்புரை மேற்கொள்ள தடைவிதித்திருக்கிறது.
மமதா பானர்ஜி கடந்த மார்ச் 28 மற்றும் கடந்த 7 ஆம் தேதி இரண்டு இடங்களில் நடைபெற்ற பரப்புரையில், மத்திய ஆயுதப்படை போலீசாருக்கு எதிராக பேசியதற்கு விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீசுக்கு பதில் அளித்த மமதா பானர்ஜி, தேர்தல் ஆணையம் எத்தனை நோட்டீஸ் அனுப்பினாலும், என்னுடைய பதில் ஒன்றே ஒன்றுதான் என்று குறிப்பிட்டு இருந்த அவர், தான் மதரீதியாக பிளவு படுத்தும் வகையில் எப்போதுமே பேசுவதில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

இதன் பின்னர்தான் இப்போது மமதாவுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்திருக்கிறது. இது தொடர்பாக, டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், சுதந்திரமாக மற்றும் நியாயமாக நடைபெறும் தேர்தல்களில்தான், ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதனால், தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சி வேட்பாளர்களுக்கும் சமமான வாய்ப்பு கிடைப்பதை, உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ள ஸ்டாலின், பக்க சார்பின்றி நடுநிலையுடன் செயல்படுவதை தேர்தல் ஆணையம் உறுதிபடுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Advertisement:

Related posts

நீண்ட நாட்களுக்கு பிறகு விஜயகாந்த் பிரச்சாரம்!

Saravana Kumar

மாலத்தீவுக்குச் செல்வதற்குத் தடை: மனமுடைந்த பாலிவுட் நடிகர்கள்- ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்

Karthick

இலவச தடுப்பூசி விவகாரம்; மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!

Ezhilarasan