முக்கியச் செய்திகள் தமிழகம்

பாரதிதாசன் பாடலை மேற்கோள் காட்டி தமிழ் புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்த முதல்வர்

நாளை தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழக மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வாழ்த்து தெரிவித்துள்ளார். பாரதிதாசனின் கவிதையை அவர் மேற்கோள்காட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாளை தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு:

தமிழ் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் எனது அன்பிற்குரிய தமிழ் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த “ தமிழ் புத்தாண்டு” நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

“ ஆதிமனிதன் தமிழன் தான்

அவன் மொழிந்ததும் செந்தமிழ்த்தேன்”

என்ற பாவேந்தர் பாரதிதான்சன் அவர்களின் கவிதைக் கேற்ப, தொன்மையும் இலக்கிய, வளமும் கொண்ட தமிழ்மொழியை பேசும் உலகின் மூத்தகுடியான தமிழ்ப் பெருமக்கள் பல்லாண்டு காலமாய் சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடி வருகிறார்கள்.

மலரும் இப்புத்தாண்டில், தமிழர்கள் அனைவரின் வாழ்விலும் அன்பும் அமைதியும் நிலவட்டும், நலமும் வளமும் பெருகட்டும் என்று வாழ்த்தி, தமிழ் மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.”

இவ்வாறு வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Advertisement:

Related posts

ஊரடங்கில் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை!

19 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது!

வாக்குப்பதிவு இயந்திரங்களை கண்காணிக்க தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுப்பது ஏன்?

Karthick