முக்கியச் செய்திகள் தமிழகம்

ஊரக உள்ளாட்சி தேர்தல்; அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை

தமிழ்நாட்டில் நடத்தப்படாமல் உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்த உள்ளது. 

தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 மற்றும் 28ம் தேதிகளில் தேர்தல் நடந்தது. மாவட்டங்கள் பிரிப்பு காரணமாக நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது.

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத 9 மாவட்டங்களில் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து உள்ளாட்சித் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை மாநிலத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் குறித்து இன்று அனைத்துக்கட்சிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கூட்டத்தில் பங்கேற்கும்படி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டத்தில் கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளை பின்பற்றி பங்கேற்கும்படி கட்சிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

முதலமைச்சர் துறைக்கு மாவட்ட வாரியாக குழு!

கலை இயக்குநர் அங்கமுத்து சண்முகம் காலமானார்

Gayathri Venkatesan

திருமணத்தில் குவிந்த 250 பேர்: 100 பேருக்கு கொரோனா, மாமனார் உட்பட 4 பேர் பரிதாப பலி!

Halley karthi