தமிழ்நாடு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக கடந்த 2016 ஆம் ஆண்டு
தொடரப்பட்ட தேர்தல் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து
உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில்
திமுக சார்பில் அனிதா ராதாகிருஷ்ணன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த
வெற்றியை எதிர்த்து, திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன்
என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், வேட்புமனுவில் 16 குறைபாடுகள் இருந்ததால், அதனை தேர்தல் அதிகாரி ஏற்றுக்
கொண்டது செல்லாது என அறிவிக்க கோரி கடந்த 2016 ம் ஆண்டு வழக்கு தாக்கல்
செய்திருந்தார். வழக்கு நிலுவையில் இருந்து வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 2021ல், பதவிக் காலம் முடிந்ததால் காலவதியாகிவிட்டது. எனவே அதனை தள்ளுபடி செய்யக் கோரி அனிதா ராதாகிருஷ்ணன் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணகுமார் இன்று
தீர்ப்பளித்துள்ளார். அதில், 2016-2021 ஐந்தாண்டு பதவிக் காலம் முடிந்துவிட்டது. அதனால் தொடர்ந்து வழக்கை நடத்த எந்த முகாந்திரமும் இல்லை எனக்கூறி, அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.







