பார்வை சவாலுடையவர்களுக்காக மாயோன் திரைப்படம் முதல் நாள் முதல் காட்சி இன்று வெளியிடப்பட்டது.
சிபி சத்யராஜ் நடிப்பில் கிஷோர் இயக்கத்தில் மாயோன் திரைப்படம் இன்று
திரையரங்கில் வெளியானது. இந்த திரைப்படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்வை
சவாலுடையவர்களுக்கு காண்பிக்கப்பட்டது. 200 பார்வை சவாலுடையவர்களுக்காக
Audio description உதவியுடன் படத்தை அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் வடபழனி
கமலா திரையரங்கில் சிறப்பு காட்சிக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பார்வை மாற்றுத் திறனாளிகள் திரையரங்கு வந்து படத்தைக் கேட்டு ரசித்தனர். நியூஸ் 7 தமிழ் அன்பு பாலம் மூலமாக 70 பார்வை சவாலுடையவர்கள் இந்தப் படத்தை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது. இன்று காலை 8.30 மணிக்கு வடபழனி கமலா திரையரங்கில் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.
முதல் நாள் முதல் காட்சி இதுவரை பார்த்ததில்லை எனவும், இந்தப் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும் பார்வை சவாலுடையவர்கள்
தெரிவித்தனர். அதேநேரத்தில் இனிவரும் காலங்களில் மற்ற படங்களையும் audio
description உதவியுடன் நாங்கள் கேட்டு ரசிக்கும் வகையில் ஏற்பாடு செய்ய
வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
-ம.பவித்ரா