முக்கியச் செய்திகள் இந்தியா

கொரோனா வைரஸ்: இந்தியாவில் கடந்த ஒரே நாளில் 3.7 லட்சத்துக்கும் அதிகமான தொற்று!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 3,79,257 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா இரண்டாம் அலை மக்களை சூறையாடி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாகுறை காரணமாக பலரும் பாதிப்படைந்து உயிரிழந்துள்ளனர். மேலும ஆக்சிஜன் பற்றாகுறையை நீக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதன் நடவடிக்கையாக சில மாநிலங்களில் இரவு ஊரடங்கும் , முழு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், தொற்று பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 3,645 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.83 கோடியாக அதிகரித்துள்ளது. இதனையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 2.04 லட்சமாக ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் பேர் தொற்றிலிருந்து 2,69,507 பேர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் இதுவரை 15 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 1.50 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கொரோனாவுக்கு 30,84,814 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்ற நிலையில், தற்போது நாடில் ஆக்சிஜன் பற்றாகுறையால் பல கொரோனா நோயாளிகள் உயிரிழக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

காதலி, அவரது தாயை கொன்று, காதலன் தற்கொலை!

Niruban Chakkaaravarthi

அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுவோருக்குப் பேருந்து சேவை : தமிழக அரசு

Karthick

எம்ஜிஆர், பலரது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்: பிரதமர் மோடி

Saravana