சென்னை மாவட்டத்தில் மாணவர்களுக்கான கல்வி கடன் வழங்கும் முகாம் நாளை (பிப்.15) நடைபெற உள்ளது.
தமிழ்நாடு அரசு மற்றும் வங்கிகள் இணைந்து மாணவர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக கல்வி கடன் வழங்கும் சிறப்பு முகாம்களை நடத்தி வருகின்றனர். அதன்படி, நாளை (பிப்.15) சென்னை மாவட்டத்திற்கான மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்கும் முகாம் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ கல்லூரியில் நடைபெற உள்ளது.
இதில் மாணவர்கள் கல்வி கடனுக்கான விண்ணப்பம், வருமானவரிச் சான்றிதழ், பான் கார்டு விண்ணப்பம் ஆகியவற்றை இ சேவை மையம் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இந்த முகாமில் அனைத்து மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.








