ஈரோடு இடைத்தேர்தல் – பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

ஈரோடு அடுத்த வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 33 வார்டு பூத் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு…

ஈரோடு அடுத்த வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 33 வார்டு பூத் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் 27ம் தேதி நடைபெற இருக்கக்கூடிய நிலையில் தேர்தல் பிரச்சாரமானது சூடு பிடித்திருக்கிறது. ஆளும் கட்சியான திமுக வாக்காளர்களை அடைத்து வைத்திருப்பதாக குற்றம் சாட்டிய எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்காளர்களை அடைத்து வைத்திருக்கும் இடத்திற்கே சென்று வாக்கு சேகரிப்போம் என்றும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்போம் என்றும் எச்சரிக்கை விடுத்து பேசினார்.

அண்மைச் செய்தி: ‘மோசடி பத்திரப்பதிவை தடுக்க மாவட்ட அதிகாரிக்கு அதிகாரம்’ – தமிழக அரசை பாராட்டிய உயர்நீதிமன்றம்

இந்நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 33 வார்டுகளிலும் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 33 வார்டு பூத் கமிட்டி உறுப்பினர்களும் 33 வார்டுகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.