அமெரிக்கா, சீனா மற்றும் ஜப்பானில் பொருளாதார நெருக்கடி – ஜே.பி. நட்டா!

கொரோனா காலத்தில் இலவசங்களுக்கு செலவு செய்ததால் அமெரிக்கா, சீனா, ஜப்பானில் தற்போது பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.  பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா 2 நாள் சுற்றுப்பயணமாக…

கொரோனா காலத்தில் இலவசங்களுக்கு செலவு செய்ததால் அமெரிக்கா, சீனா, ஜப்பானில் தற்போது பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார். 

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று மும்பை வந்தார். மத்திய அரசின் பல்வேறு நல திட்டங்களில் பயனடைந்தவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு ஜே.பி.நட்டா பேசியதாவது:

அமெரிக்கா, சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் தற்போது பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றன. இதற்கு காரணம் அந்த நாடுகள் கொரோனா தொற்று காலத்தில் இலவசங்களுக்காக செலவு செய்தது தான். அதே நேரத்தில் இந்தியாவில் விவசாயம், உள்கட்டமைப்பு மற்றும் பிற துறைகளை மேம்படுத்துவதற்கு ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு திட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தது.

மேலும் மிகக்குறுகிய காலத்தில் அதிகம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியதிலும் இந்தியா மிக சிறப்பாக செயல்பட்டது. மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அந்த மாநிலத்தின் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான அரசு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கி வருகிறது.

இவ்வாறு ஜெ.பி.நட்டா பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.