டைட்டானிக் கப்பலின் பிரமிக்க வைக்கும் புதிய டிஜிட்டல் ஸ்கேன்கள்; வைரலாகும் 3D காட்சிகள்!

டைட்டானிக் கப்பலின் பிரமிக்க வைக்கும் புதிய டிஜிட்டல் ஸ்கேன்களை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.  உலகின் மிகப் பெரிய பயணிகள் கப்பலான ‘ஆம்எம்எஸ் டைட்டானிக் கப்பல்’ தனது முதல் பயணத்தின்போதே கடலில் மூழ்கியது மனித குலம் மறக்க…

டைட்டானிக் கப்பலின் பிரமிக்க வைக்கும் புதிய டிஜிட்டல் ஸ்கேன்களை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். 

உலகின் மிகப் பெரிய பயணிகள் கப்பலான ‘ஆம்எம்எஸ் டைட்டானிக் கப்பல்’ தனது முதல் பயணத்தின்போதே கடலில் மூழ்கியது மனித குலம் மறக்க முடியாத மிகப் பெரிய துயர நிகழ்வாகும்.

1912 ஆம் ஆண்டு வட அட்லாண்டிக் பெருங்கடலில் பனிப்பாறை ஒன்றுடன் மோதியதில் அந்த கப்பல் மூன்று மணி நேரங்களில் முற்றாக மூழ்கியது. அதில் அதில் பயணம் செய்த ஆயிரத்து 503 பேரும் உயிரிழந்தது உலகின் மிகப் பெரிய கடல் அழிவாக கருதப்படுகிறது.

இந்நிலையில் ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் மூழ்கிய டைட்டானிக் கப்பல் தற்போது எப்படி உள்ளது எனபது பற்றிய புது தகவல் வெளியாகியுள்ளது.

அட்லாண்டிக் பெருங்கடலின் தரையில் தண்ணீருக்கு அடியில் 12,500 அடியில் இருக்கும் கப்பலின் முதல் முழு அளவிலான டிஜிட்டல் ஸ்கேன், ஆழ்கடல் வரைபடத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, ஆழ்கடல் மேப்பிங் நிறுவனமான மாகெல்லன் லிமிடெட், லண்டனைச் சேர்ந்த அட்லாண்டிக் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து இந்த ஸ்கேனிங் வேளையை தொடங்கியது.

இந்த ஸ்கேன் முழு இடிபாடுகளின் முப்பரிமாணக் காட்சியைத் தெள்ளத்தெளிவாகக் காட்டுகிறது. ஒரு காலத்தில் “மூழ்க முடியாதது” என்று அழைக்கப்பட்ட கப்பலை நீருக்கடியில் உடைந்த கல்லரைப் போல் காணப்படுகிறது.

டைட்டானிக் 1985 இல் சிதைவு கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டாலும், இந்த அளவு துல்லியமான டிஜிட்டல் ஸ்கேன் செய்வதது இதுவே முதல் முறை.

சிறிய நீர்மூழ்கிக் கப்பல்கள், தொலைவிலிருந்து கட்டுப்படுத்தப்பட்டு, சிதைவின் முழுப் பகுதியையும் பகுப்பாய்வு செய்ய 200 மணி நேரத்திற்கும் மேலாக செலவிடப்படாததாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு கோணத்திலிருந்தும் 700,000 க்கும் மேற்பட்ட படங்களைக் குழு எடுத்ததுள்ளதன் மூலம் படகின் துல்லியமான 3D புனரமைப்பை உருவாக்க முடிந்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.