முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

முதலமைச்சரின் கள ஆய்வு எதிரொலி; ஒரே நாளில் 4 துறை அதிகாரிகள் அதிரடி மாற்றம்!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் கள ஆய்வு நடத்திய நிலையில், அங்கு சரியாகச் செயல்படாத 4 துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தை துவக்கி வைத்து வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்து வருகிறார். அதன்படி, இன்று கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் கடந்த 26 மற்றும் 27 ஆகிய இரண்டு நாட்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்போது கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஏற்கனவே நடைபெற்ற கள ஆய்வுக் கூட்டத்தில் நான் ஆய்வு செய்த தகவல்களை மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் என அதற்கு ஏற்ப பணிகளை முடக்கி விட்டு உள்ளீர்கள். அதுபோன்று செய்யாமல் அனைத்து பணிகளும் திட்டமிட்டு நிறைவேற்ற வேண்டுமென மாவட்ட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் இந்த மாவட்டங்களில் பணிகள் நன்றாக நடைபெறவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், விழுப்புரம் மண்டலத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் கள ஆய்வினைத் தொடர்ந்து பணியிட மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குநர் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக எஸ். செல்வராணி நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகவன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக ம. ராஜசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல், கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜி. சரஸ்வதி மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக கோ.கிருஷ்ணபிரியா பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் விழுப்புரம் நகர காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்திபனும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram