என் கன்ரோல் என் கையில் இல்லையே: ஈஸ்வரன் ட்ரைலர் வெளியானது

சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகயிருக்கும் ஈஸ்வரன் படத்தின் ட்ரைலர் வெளியானது. மாநாடு படத்தில் அதிரடியாக நடித்துக்கொண்டிருக்கும் நடிகர் சிம்பு அதிரடியா சமூகவலைதளமான ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் களமிறங்கி சமீபகாலமாக தன்னை பற்றி மற்றும்…

சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகயிருக்கும் ஈஸ்வரன் படத்தின் ட்ரைலர் வெளியானது.

மாநாடு படத்தில் அதிரடியாக நடித்துக்கொண்டிருக்கும் நடிகர் சிம்பு அதிரடியா சமூகவலைதளமான ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் களமிறங்கி சமீபகாலமாக தன்னை பற்றி மற்றும் படம் பற்றி updateகளை வெளியிட்டு வருகிறார். பீஃப்சாங், காதல், ஜல்லிக்கட்டு போராட்டம், நடிகர் சங்க தேர்தல், பெரியார் குத்து பாடல், அவரது தம்பி திருமணம், பின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியோடு பிரச்சனை என அனைத்து பிரச்சனையையும் தாண்டி, ஒரு வழியாக கடந்த மாதம் ஈஸ்வரன் படப்பிடிப்பு மற்றும் டப்பிங் பணிகளை முடித்து கொடுத்துவிட்டு மாநாட்டில் களமிறங்கினார். இந்நிலையில் மீண்டும் சர்ச்சைக்குள் சிக்கியுள்ளார் நடிகர் சிம்பு.

பொங்கல் பண்டிகையன்று திரையரங்குகளில் ஈஸ்வரன் திரைப்படம் நிச்சயம் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது இந்நிலையில் இன்று படத்தின் ட்ரைலரை வெளியிடப்பட்டது. அதில் சிம்பு பேசும் ’நீ அழிக்கிறதுக்காக வந்த அசுரனா? நான் காக்குறதுக்காக வந்த ஈஸ்வரன்டா’ என பேசியுள்ளார். குறிப்பிட்ட படத்தை குறிப்பது போல உள்ளது இந்த வசனம் என இணையத்தில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply