அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம், நாளை சென்னை வானகரத்தில் நடைபெறுகிறது.
அதிமுக பொதுக்குழு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. தற்போது கொரோனா ஊரடங்கில், பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், இந்தாண்டுக்கான அதிமுக பொதுக்குழுவை, சென்னை வானகரம் தனியார் திருமண மண்டபத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு நாளை காலை கூடுகிறது. கூட்டத்துக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். தமிழக சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற இருப்பதால், நாளை நடைபெறும் பொதுக்குழு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இக்கூட்டத்தில், கூட்டணி குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்படும், என கூறப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்