அரியலூர் சிறப்பு குடும்பநல நீதிமன்ற அறையில் நீதிமன்ற நிர்வாக அலுவலர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்
கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நீதிமன்ற நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த நெடுஞ்செழியன், கோப்புகளை தனது அறைக்கு சென்று பார்ப்பதாக கூறிவிட்டு, சென்றவர் நீண்ட நேரமாக வரவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த நீதிமன்றப் பணியாளர்கள் நெடுஞ்செழியனின் அறைக்கு சென்று பார்த்தபோது அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டுஉயிரை மாய்த்துக்
கொண்டது தெரியவந்தது இதனால் அதிர்ச்சி அடைந்த நீதிமன்றப் பணியாளர்கள் இதுகுறித்து அரியலூர் காவல்துறைக்கு புகார் செய்தனர். சம்பவத்தைக் கேள்விப்பட்ட தலைமை நீதிமன்ற பணியாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு முன்பு குழுமியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நெடுஞ்செழியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நெடுஞ்செழியன் நீதிமன்றத்தில் தனது அறையில் உயிரை மாய்த்துக்
கொண்டதன் காரணம் என்ன பணிச்சுமையா அல்லது குடும்ப பிரச்சினையா என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
உயிரை மாய்த்துக்கொண்ட நெடுஞ்செழியன் சட்டைப் பையில் கடிதம் இருப்பதை கண்ட போலீசார் அதனை கைப்பற்றினர்.அதில் 2004ஆம் ஆண்டு நடைபெற்ற சாலை விபத்து மற்றும் 2007ம் ஆண்டு உடல்நிலை சரியில்லாதபோது நீதிமன்றத்தின் மூலம் சிகிச்சை பெற நடவடிக்கை எடுத்தார்கள் அதேபோல் கொரோனா காலகட்டத்திலும் எனக்கு பல்வேறு உதவிகள் நீதிமன்றத்தின் மூலம் செய்தனர். ஆனால் தற்போது எனது எடை நாளுக்குநாள் குறைந்து வருவதால் எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது கேன்சர் இருக்குமோ என்ற சந்தேகத்தையும் எனக்கு ஏற்படுத்தி உள்ளது எனவே நான் உயிரை மாய்த்துக் கொள்வதாக அதில் எழுதப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது எனினும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.







