ஈஸ்டர் பண்டிகை – தவெக தலைவர் விஜய் வாழ்த்து!

ஈஸ்டர் திருநாளையொட்டி தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு 3-ம் நாள் உயிர்த்தெழுந்தார் என்பது கிறிஸ்தவ மக்களின் இறைநம்பிக்கை ஆகும். இதன் அடிப்படையில் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ மக்கள் ஈஸ்டர் திருநாளை கொண்டாடி வருகின்றனர். அதன்படி ஈஸ்டர் திருநாள் உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களால் இன்று கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில் ஈஸ்டர் திருநாளையொட்டி தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடரபாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நன்னாளை ஈஸ்டர் திருநாளாகக் கொண்டாடும் சகோதர சகோதரிகளுக்கு நல்வாழ்த்துகள். இத்திருநாளில் அனைவரிடமும் அன்பு, சமாதானம், கருணை, சகோதரத்துவம், மனிதநேயம் ஆகியவை வளர்ந்தோங்கி நிலைக்கட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.