முக்கியச் செய்திகள் இந்தியா

’இப்போதைய பெண்கள் குழந்தைப் பெற்றுக்கொள்ள விரும்புவதில்லை’: அமைச்சர் பேச்சால் சர்ச்சை

நவீன பெண்கள் குழந்தைப் பெற்றுக்கொள்வதை விரும்பவில்லை என்றும் தனித்து வாழவே விரும்புகிறார்கள் என்றும் கர்நாடக அமைச்சர் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பெங்களுரில் உள்ள தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்தில் (NIMHANS) உலக சுகாதார தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் கே.சுதாகர், கலந்துகொண்டார். அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:

இதை சொல்வதற்கு வருத்தமாக இருக்கிறது. இப்போதுள்ள நவீன கால பெண்கள் தனித்து வாழவே விரும்புகின்றனர். திருமணம் செய்துக் கொண்டாலும், குழந்தை பெற்றுக் கொள்வதற்கு அவர்கள் விரும்புவதில்லை. வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். நம் சிந்தனையில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருக் கிறது. இது நல்லதல்ல. துரதிர்ஷ்டவசமாக மேற்கத்திய கலாசாரத்தின் தாக்கம் இந்திய மக்களிடம் அதிகரித்து வருகிறது. பெற்றோர் தங்களுடன் இருப்பதையே பலர் விரும்பு வதில்லை.

மன அழுத்தத்தை எப்படி குறைக்க வேண்டும் என்பதை உலகுக்கு நாம் போதிக்க வேண்டும். ஏனென்றால் யோகா, தியானம் மற்றும் பிராணயாமா ஆகியவற்றை ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, நம் முன்னோர்கள் கற்றுக் கொடுத்திருக் கிறார்கள். இவ்வாறு கூறினார். பெண்கள் குறித்த அமைச்சரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டின் ஆளுநராக ரவி சங்கர் பிரசாத் நியமிக்கப்படலாம் என தகவல்!

Jeba Arul Robinson

வெளிநாடுகளில் இருந்து வருவோர்க்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்!

Jeba Arul Robinson

அமைச்சரவை கூட்டத்தில் 6 முக்கிய முடிவுகள்!

Halley karthi