காஷ்மீர் இந்தியாவின் நில நடுக்கம் ஏற்படக்கூடிய மண்டலங்களில் ஒன்றாகும். இந்தப் பகுதியில் கடந்த காலங்களில் குறிப்பிடத்தக்க நில அதிர்வு ஏற்பட்டுள்ளன.
இந்த நிலையில் இன்று காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தேசிய நில அதிர்வு மையம் தகவலின் படி வடக்கு காஷ்மீரில் உள்ள குப்வாரா மாவட்டத்தை மையமாக கொண்டு 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் பிற்பகல் 1.41 மணிக்கு வடக்கு அட்சரேகை 34.68 டிகிரி மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 74.39 டிகிரியில் ஐந்து கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த நில நடுக்கத்தால் இதுவரை எந்த சேதமும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.







