ஈரானில் நிலநடுக்கம்: 3 பேர் பலி; 19 பேர் படுகாயம்!

ஈரானில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 19 பேர் பலத்த காயமடைந்தனர். ஈரானில் தென்மேற்கில் பந்தர் அப்பாஸ் பகுதியில் இருந்து 100 கிலோமீட்டர்  தொலைவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.…

ஈரானில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 19 பேர் பலத்த காயமடைந்தனர்.

ஈரானில் தென்மேற்கில் பந்தர் அப்பாஸ் பகுதியில் இருந்து 100 கிலோமீட்டர்  தொலைவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 19 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இதையடுத்து, அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலநடுக்கம் ஏற்படுவதற்கு ஒரு நிமிடத்திற்கு முன்னர் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து, ஹார்மோஜ்கான் ஆளுநர் மஹ்தி தோஸ்தி கூறுகையில், இந்த நிலநடுக்கத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 19 பேர் காயமடைந்துள்ளனர். நிலநடுக்கம் காரணமாக சயே கோஸ்ட் கிராமத்தில் பல்வேறு சேதங்கள் ஏற்பட்டுள்ளன என்றார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.