பாகிஸ்தானில் இன்று அதிகாலை 3.54 மணிக்கு திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது. பாகிஸ்தானின் முல்தான் நகரில் இருந்து 149 கிலோமீட்டருக்கு மேற்கே 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் நிலை கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.2 என்ற அளவில் பதிவாகியுள்ளது.
அதிகாலை நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் தூக்கத்தில் இருந்து எழுந்து வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் வீட்டில் உள்ள பொருட்கள் குலுங்கின. பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தேசிய நிலஅதிர்வு மையம் உறுதி செய்துள்ளது.
இதுதொடர்பாக அந்த தேசிய நிலஅதிர்வு மையம் சார்பில், ‛‛பாகிஸ்தானில் இன்று அதிகாலை 3.54 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 5.2 என பதிவாகி உள்ளது. உயிரிழப்புகள் அல்லது சேதங்கள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.







