நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் … பிரதீப் ரங்கநாதன்!

அஸ்வத் மாரிமுத்துவிடம் நான் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று கூறியதாக பிரதீப் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகி கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்த திரைப்படம் டிராகன். இந்த படத்தில் கயாடு லோஹர், அனுபாமா பரமேஷ்வரன், மிஷ்கின் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்த இப்படம் 100 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்துள்ளது.

இந்த நிலையில் இப்படத்தின் 100-வது நாள் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பிரதீப் ரங்கநாதன், இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் மாரிமுத்து ‘ஓ மை கடவுளே படம்’ இயக்கி கொண்டிருந்தபோது சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க கூப்பிட்டார். நான் காதல் பட கதாபாத்திரம் வில்லன், அமெரிக்கா மாப்பிள்ளை போல் நடிக்க மாட்டேன், நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று அவரிடம் கூறிவிட்டேன். பின்னர் லவ் டுடே படத்தை ரிலீசுக்கு முன்பு அஸ்வத்துக்கு காண்பித்தேன்.

அதன் பிறகு, என்னை ஹீரோவாக வைத்து ஒரு படம் இயக்குகிறாயா என்று அவரிடம் கேட்டேன். லவ் டுடே படம் ஹிட்டானதால் உடனே நாங்கள் அடுத்த படத்தில் இணைந்தோம். கோமாளி, லவ்டுடே, டிராகன் என என்னுடைய 3 படங்களும் 100வது நாளை கொண்டாடி உள்ளது. ரசிகர்களுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.