அரசியல் முட்டுக்கட்டைகளைத் தகர்த்து அணு ஆயுத விநியோகக் குழுவில் (என்எஸ்ஜி) உறுப்பினராக இணைய எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம் என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்று 8 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இந்த 8 ஆண்டு கால ஆட்சிக் காலத்தில் வெளியுறவுக் கொள்கை சாதனைகள் என்ற தலைப்பில் அமைச்சர் ஜெய்சங்கர், டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியதாவது:
பொருட்களை இந்தியாவில் தயாரிக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். ஆனால், வெளிநாடுகளில்தான் பெரும்பாலான பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. உலகம் என்பது ஒரே குடும்பம் என்பதையும் அதன் அதீத வளர்ச்சியையும் இந்தியா நம்புகிறது. கடந்த 8 ஆண்டுகளில் கடனுதவி அளிப்பதையும் மும்மடங்காக ஆக்கியிருக்கிறோம். ஜனநாயகத்துக்கு இந்தியா தான் சான்றாக விளங்குகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நமது அண்டை நாடுகளுடன் பரஸ்பர அணுகுமுறை, தாராளமயவாதம் ஆகியவற்றில் நமது முதல் கொள்கை தெளிவாக இருக்கிறது. அணு ஆயுத விநியோகக் குழுவில் சேர இந்தியா ஆர்வத்துடன் காத்திருக்கிறது என்று அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்: தூய்மைப் பணி: களத்தில் இறங்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய மத்திய அமைச்சர்!
அணு ஆயுத விநியோகக் குழுவில் இந்தியா உறுப்பினராவதற்கு சீனா முட்டுக்கட்டை போட்டு வருகிறது. என்எஸ்ஜியில் கனடா, பிரான்ஸ், ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
-மணிகண்டன்