முக்கியச் செய்திகள் குற்றம்

காதலிப்பதாகக் கூறி நண்பர்களுடன் சேர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் காதலிப்பதாகக் கூறி சிறுமியை அழைத்துச் சென்று வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்கள் 4 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஆனந்த பாலம் பகுதியை சேர்ந்தவர் ஆல்டோ மைக்கேல் என்ற 21 வயது இளைஞர். இவர் குளச்சல் அருகே உள்ள வாணியங்குடி பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவருடன் காதலிப்பதாகக் கூறி பழகி வந்துள்ளார். நாளுக்கு அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பேசி வந்த ஆல்டோ மைக்கல் சிறுமியை தனியாக அழைத்துச் செல்ல முடிவு செய்தார்.


இதன்படி, சிறுமியிடம் பொய் கூறி கன்னியாகுமரி மாவட்டம் அழகியபாண்டிபுரம் பகுதியில் உள்ள உலக்கை அருவிக்கு அழைத்துச் சென்றுள்ளார். முதலில் அங்கு சுற்றிப்பார்த்துவிட்டு பின்னர் அருகில் உள்ள ஒரு வீட்டிற்கு சிறுமியை அழைத்துச் சென்றார் மைக்கேல். தன்னுடன் நெருங்கி பழகும் நம்பிக்கையில் சென்ற சிறுமிக்கு அங்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டிற்குள் அழைத்து சென்ற மைக்கேல் தனது நண்பர்களுடன் 2 நாட்களாக சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த நிகழ்வு குறித்து சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் ஆல்டோ மைக்கேல் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேரையும் கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement:

Related posts

திராவிட கட்சிகளிடம் இருந்து தமிழகத்திற்கு மாற்றம் தேவை – சரத்குமார்

Gayathri Venkatesan

தமிழகத்தில் 15 ஆயிரத்தைக் கடந்த தினசரி கொரோனா பாதிப்பு!

Ezhilarasan

நீதிபதி சஞ்சீப் பானர்ஜியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை!

Jeba