275 பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலக் கல்லூரி விடுதிகளில் மின் நூல்களை இணைய வழியில் படிக்க ஏதுவாக கணினி மற்றும் இதர உபகரணங்களை எல்காட் மூலம் வாங்க நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கல்லூரி விடுதியில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவியர் அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள மின்நூல்கள் உட்பட இதர மின்நூல்களை இணைய வழியில் படிப்பதற்கு ஏதுவாக ஒரு நூலகத்திற்கு ரூ.80,000 செலவில் 275 கல்லூரி விடுதிகளுக்கு ரூ.2.20 கோடி செலவில் உபகரணங்கள் வாங்கி வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அண்மைச் செய்தி: ‘ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1,10,000 கன அடியாக அதிகரிப்பு!’
அதனைச் செயல்படுத்தும் வகையில், 275 பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலக் கல்லூரி விடுதிகளில் மின் நூல்களை இணைய வழியில் படிக்க ஏதுவாக கணினி மற்றும் இதர உபகரணங்களை எல்காட் மூலம் வாங்க, ரூ.2,13,18,275 நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.








