துபாயில் இருந்து சென்னைக்கு உள்ளாடைக்குள் கடத்தி வரப்பட்ட ரூ. 41 லட்சத்து 83 ஆயிரம் மதிப்புள்ள 936 கிராம் தங்கம் பறிமுதல் திருச்சி வாலிபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் பெரும் அளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை கமிஷனர் உதய் பாஸ்கருக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது துபாயில் இருந்து வந்த திருச்சியை சேர்ந்த ராஜன் (32) என்பவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லை. பின்னர் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டு பிடித்தனர்.
https://twitter.com/ChennaiCustoms/status/1547110456141426688
அவரிடம் இருந்து ரூ. 41 லட்சத்து 83 ஆயிரம் மதிப்புள்ள 936 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ராஜனை கைது செய்து தங்க கடத்தல் பிண்ணனியில் உள்ளவர்கள் யார் என சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.







