வாடிவாசல், சூர்யா 43, ரோலக்ஸ் கதை, இரும்புக்கை மாயாவி போன்ற சூர்யாவின் அடுத்தடுத்த படங்களுக்கு அவர் அப்டேட் கொடுத்துள்ளார்.
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக நடிகர் விஜய் நடிப்பில் ‘லியோ’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
‘லியோ’ படம் தொடர்பான அறிவிப்பு வெளியானதில் இருந்தே இதன் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வந்தது. இதற்கு முன் லோகேஷ் இயக்கிய கைதி, விக்ரம் ஆகிய திரைப்படங்களின் கதை ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக அமைந்திருந்தது. ஹாலிவுட் திரைப்படங்களில் வரும் சினிமேட்டிக் யூனிவர்ஸ் கதைகளைப் போல் இதனை ரசிகர்கள் ‘எல்.சி.யூ.’ என்று அழைத்து வருகின்றனர். தற்போது விஜய் நடிக்கும் ‘லியோ’ படமும் இந்த ‘எல்.சி.யூ.’ வில் வருமா என்பது ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்த நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கோவை சரவணம்பட்டியில் நடைபெற்ற தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்களோடு கலந்துரையாடினார். அப்போது லோகேஷ் கனகராஜின் கனவுத்திரைப்படம் குறித்து கேள்வி எழுப்பிய போது, ”எனது கனவுத்திரைப்படமாக இரும்பு கை மாயாவி திரைப்படம் அமையும். நான் கடந்த 10 ஆண்டுகளாக இந்த கதையை எழுதி கொண்டு வருகிறேன்; நிச்சயமாக இது படமாகும் ” என அவர் தெரிவித்தார்.
இதற்கு முன் இரும்பு கை மாயாவி திரைப்படத்தை சூர்யாவை வைத்து இயக்க இருப்பதாக தகவல் வெளியானது. இதனை நடிகர் சதிஷ் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இரும்பு கை மாயாவி என்னும் கதாபாத்திரமானது 90களின் பிற்பகுதியில் பிரபலமாக இருந்த ஒன்று. இந்த கதை இன்றும் 90கிட்ஸ்களின் ஃபேவரைட் லிஸ்ட்ல் ஒன்று .
தற்போது ரஜினி 171 படத்திற்காக திரைக்கதை அமைக்கும் பணியில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நடிகர் சூர்யா ரசிகர்கள் சந்திப்பின்போது, “விடுதலை2 படப்பிடிப்பு முடிந்து வாடிவாசல் நடைபெறும். சூர்யா 43 அக்டோபரில் துவங்க உள்ளது. ரோலக்ஸ் கதை தனிப்படமாக உருவாக உள்ளது. லோகேஷ் இது குறித்து கதை கூறியுள்ளார். எனக்கு பிடித்துள்ளது. விரைவில் நடக்கும். இரும்புக்கை மாயாவி ரோலக்ஸ்க்குப் பிறகு நடக்கும்” என கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.