முக்கியச் செய்திகள் இந்தியா

காஷ்மீரில் அத்துமீற பறந்த ட்ரோன்; தேடுதல் பணியில் பாதுகாப்பு படையினர்

காஷ்மீர் மாநிலத்தில் அத்துமீற பறந்த ட்ரோனை எல்லை பாதுகாப்பு படையினர் மற்றொரு ட்ரோன் மூலம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 

இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியான ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல், ட்ரோன் ஊடுருவல் போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. இந்த அத்துமீறல்களை தடுக்கும்விதமாக எல்லை காவல் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சம்பா மாவட்டத்தில் உள்ள மங்கு சக் என்ற கிராமத்தில் நேற்றிரவு ட்ரோன் ஒன்று அத்துமீறி பறந்து சென்றுள்ளது. இதைக்கண்ட அக்கிராம மக்கள் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளனர். இதைதொடர்ந்து போலீசார் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இரவு நேரம் என்பதால் ட்ரோன் குறித்து எந்த தகவலும் தெரியவில்லை.

 

இதையடுத்து இன்று காலை அப்பகுதியில் எல்லைப்பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் இணைந்து ஒரு ட்ரோனை பறக்க விட்டுள்ளனர். அதன்மூலம் அப்பகுதியில் தீவிரவாதிகள் யாரேனும் பதுங்கியுள்ளனரா? இல்லை வேறு ட்ரோன் அப்பகுதியில் பறக்கிறா? என்று தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“கருத்துக் கணிப்புகள் என்ற பெயரில் கருத்து திணிப்புகள் நடைபெறுகிறது” : கமல்ஹாசன்

Halley Karthik

தேசத்தைப் பற்றி தெரியாதவர்களே வீர சாவர்க்கரை எதிர்க்கிறார்கள்- தமிழிசை சவுந்தரராஜன்

Web Editor

மிக கனமழை; தயார்நிலையில் இருப்பதாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தகவல்

Halley Karthik