நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலியாக திருச்செந்தூர் நகராட்சியில் அனைத்து
பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகம் வழங்கப்பட்டது. கடந்த 11 நாட்களாக தண்ணீர்
வழங்கப்படாத நிலையில் நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலியால் நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் நகராட்சியில் உள்ள 27 வார்டு பகுதியில் கடந்த 11 நாட்களுக்கு மேலாக தண்ணீர் வழங்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் தெரிவித்தனர். திருச்செந்தூர் திருநெல்வேலி சாலையில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு கடந்த 11 நாட்களாக தண்ணீர் வழங்கப்படாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர். அத்தியாவசிய தேவைகளுக்கு கூட தண்ணீர் இல்லாமல் கடும் வேதனை தெரிவித்தனர்.இது தொடர்பாக நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டு இருந்தது இந்த செய்தியின் எதிரொலியாக நேற்று மாலை குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு மட்டும் நகராட்சி நிர்வாகம் லாரி மூலம் தண்ணீர் வழங்கப்பட்டது. பிறகு அப்பகுதியில் உள்ள குடிநீர் உடைப்புகள் சரிசெய்யப்பட்டது. இன்று அதிகாலை முதல் நகராட்சியில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் குழாய் மூலம் சீரான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. 11 நாட்களுக்கு மேலாக தண்ணீர் வழங்கப்படாத நிலையில் நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலியாக தண்ணீர் வழங்கப்பட்டுள்ளதற்கு பொதுமக்கள் நியூஸ் 7 தமிழுக்கு நன்றி தெரிவித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்