செய்திகள் சினிமா விளையாட்டு

“கனவு நனவானது” – ரஜினியைச் சந்தித்த கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன்

நடிகர் ரஜினி காந்தை இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் அவரது வீட்டில் சந்தித்துள்ளார்.

கேரளத்தில் பிறந்தவர் 28 வயதான சஞ்சு சாம்சன். இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர். மேலும், ஐபிஎல்லில் ராஜஸ்தான் அணியின் கேப்டன். அதிரடியாகவும், அசல்டாகவும் சிக்ஸர்களை அடிப்பதில் சிறப்பு வாய்ந்தவர். சிறு வயதிலிருந்தே நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான இவர் பல்வேறு பேட்டிகளில் இதைத் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சஞ்சு சாம்சனின் கனவு தற்போது நனவாகியுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஐபிஎல் 2023 மார்ச் மாதம் 31ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கு சாம்சன் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார். நடிகர் ரஜினி நெல்சன் இயக்கத்தில் ’ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். நடிகர் ரஜினி அழைப்பு விடுத்ததையடுத்து சாம்சன் அவரது வீட்டிற்கு சென்று ரஜினியை சந்தித்துள்ளார்.

இதையும் படிக்க: ஆஸ்கர் விருதை பணம் கொடுத்து வாங்கியுள்ளனர்? – பாலிவுட் மேக்கப் கலைஞரின் சர்ச்சை பேச்சு

இதுகுறித்து, சஞ்சு சாம்சன் தனது ட்விட்டர் பக்கத்தில், 7 வயதில் இருந்தே நான் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகன். அப்போதிருந்தே எனது பெற்றோர்களிடன் கூறி வந்தேன் நிச்சயம் ஒருநாள் ரஜினியை அவரது வீட்டில் சென்று சந்திப்பேன் என்று. தலைவர் என்னை அவரது வீட்டிற்கு அழைத்ததன் மூலம் 21 ஆண்டுகள் கழித்து என்னுடைய கனவு நனவானது எனத் தெரிவித்துள்ளார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டில் மீண்டும் தொடங்கும் கனமழை – வானிலை ஆய்வு மையம்

NAMBIRAJAN

முதலாமாண்டு மாணவர்களுக்கான ஆய்வக வகுப்புகளை வரும் 6ஆம் தேதிக்குள் முடிக்க உத்தரவு!

Gayathri Venkatesan

ஷாருக்கானுக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி

EZHILARASAN D