தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா இந்தியாவின் நதிகளை அடிப்படையாக கொண்ட பாடல் வீடியோ ஒன்றை தனது ட்விட்டரில் பகிர்ந்து பாராட்டு தெரிவித்துள்ள சம்பவம் தற்போது வைரல் ஆகி வருகிறது.
தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பயன்பாட்டில் எப்போதுமே ஆக்டிவாக இருக்க கூடிய நபர். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கிட்டத்தட்ட 10.4 மில்லியன் Followers-களை வைத்துள்ளதோடு, அவ்வப்போது நகைச்சுவையான மற்றும் புதிரான விஷயங்களை அதில் பகிர்ந்து கொள்வதை வழக்கமாகவும் வைத்திருப்பவர். இது தவிர, அவர் பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களையும், படைப்பாற்றல் மற்றும் புதுமைகளுக்காக மக்களை பாராட்டுவதையும் அவரது பல ட்விட்களில் நம்மால் காணமுடியும்.
அந்த வகையில் கடந்த வாரம் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டரில் ‘Rivers of India’ என்ற அற்புதமான பாடலை பகிர்ந்துள்ளார். பெயருக்கு ஏற்றாற்போல், இந்தப் பாடல் இந்தியாவில் உள்ள நதிகளின் பெயர்களை அடிப்படையாகக் கொண்டது. இது IITM-ன் பழைய
மாணவரான கன்னிக்ஸ் கன்னிகேஸ்வரன் என்பவரால் உருவாக்கப்பட்டு , International Center for Clean Water, IIT Madras சார்பாக தயாரிக்கப்பட்ட பாடலாகும்.
இதில், கௌஷிகி சக்ரவர்த்தி மற்றும் அவரது மகன் ரிஷித், பாம்பே ஜெயஸ்ரீ மற்றும் அவரது மகன் அம்ரித் உட்பட பலர் தங்களது பங்களிப்பை கொடுத்து பாடியுள்ளனர். இந்தியாவின் 51 நதிகளின் பெயர்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு அற்புதமான பாடலான இது, கடந்த 2021 ஆம் ஆண்டு பூமி தினத்தன்று நீர் ஆதாரங்களை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வெளியிடப்பட்டது.
இந்நிலையில், சமீபத்தில் இந்த பாடலை மீண்டும் நினைவுகூர்ந்து பகிர்ந்துள்ள ஆனந்த் மஹிந்திரா, அந்த பதிவில் ‘Let the music flow through you—just like a river. Enjoy it—& enjoy the weekend’என்ற வரிகளை இறுதி வாக்கியமாக பதிவிட்டுள்ளார். அதாவது இதன்
அர்த்தம் ”ஒரு நதியைப் போல இசை உங்களுள் பாயட்டும். அதை அனுபவிக்கவும் – வார இறுதி நாட்களை அனுபவிக்கவும்” என்பதே. தற்போது இந்த ட்விட்டர் பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
A wondrous song based on the names of 51 rivers of India. Created to build awareness ofthis valuable resource. A global collaboration featuring Bombay Jayashri (and her son, Amrit) along with Kaushiki Chakraborty (and her son, Rishith) & many others. Let the music flow through… pic.twitter.com/qepJZrWcht
— anand mahindra (@anandmahindra) March 11, 2023
- பி.ஜேம்ஸ் லிசா










