’தேசியம் போற்றிய திராவிட தலைவர் எம்ஜிஆர்’ – தமிழிசை புகழாரம்

தேசியம் போற்றிய திராவிட தலைவர் எம்ஜிஆர் என தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 106வது பிறந்தநாள் விழா தமிழ்நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்…

தேசியம் போற்றிய திராவிட தலைவர் எம்ஜிஆர் என தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 106வது பிறந்தநாள் விழா தமிழ்நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை அண்ணா சாலையில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தன்னுடைய திருமணத்தை நடத்தி வைத்தவர் என்பதால் நன்றி உணர்வோடு அவருக்கு மரியாதை செலுத்தியதாக கூறினார். எம்ஜிஆர் தேசிய தலைவரா? திராவிட தலைவரா? என எழுப்பிய கேள்விக்கு, தேசியம் போற்றிய திராவிட தலைவர் என்று தமிழிசை பதில் அளித்தார்.

மேலும் அதிமுகவின் தற்போதைய நிலை குறித்து ஆளுநராக தன்னால் கருத்து தெரிவிக்க முடியாது என்று கூறிய அவர், அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து என்றும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.