கடந்த 60 ஆண்டுகளில் முதன்முறையாக சீனாவில் குறையும் மக்கள்தொகை

சீனாவில் கடந்த 60 ஆண்டுகளில் முதன்முறையாக மக்கள் தொகை எண்ணிக்கை குறைந்து வருவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகில் அதிக மக்கள் தொகை எண்ணிக்கை கொண்ட நாடாக சீனா இருந்து வருகிறது. ஆனால் 1961ம்…

சீனாவில் கடந்த 60 ஆண்டுகளில் முதன்முறையாக மக்கள் தொகை எண்ணிக்கை குறைந்து வருவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகில் அதிக மக்கள் தொகை எண்ணிக்கை கொண்ட நாடாக சீனா இருந்து வருகிறது. ஆனால் 1961ம் ஆண்டுக்குப் பிறகு சீனாவில் தற்போது மக்கள் தொகை எண்ணிக்கை குறைந்து வருவதாக தெரிவிகப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டில் இந்தியா உலகில் அதிக எண்ணிக்கை கொண்ட நாடாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2022-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் மக்கள் தொகை 1,411,750,000 ஆக இருந்தது என்று சீனாவின் தேசிய புள்ளியியல் மையம் தெரிவித்துள்ளது. ஆனால் இதற்கு முந்தைய ஆண்டு சீனாவில் மக்கள் தொகை 1,412,600,000 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதாவது 2022-ம் ஆண்டில் மக்கள் தொகை 8,50,000 குறைந்துள்ளது.

அதேபோல் பிறப்பு எண்ணிக்கை 9.56 மில்லியன் ஆகவும், இறப்பு எண்ணிக்கை 10.41 மில்லியன் ஆகவும் இருந்தது. அதாவது 1976ம் ஆண்டிலிருந்து கணக்கிடுகையில் தற்போது அதிக இறப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளதாக கூறியுள்ளது. அதாவது 1,000 மக்களில் 7.37 என்ற அளவுக்கு இறப்பு விகிதம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இது 2021 ஆண்டில் இறப்பு விகிதம் 7.18 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

பிறப்பு விகிதம் கடந்த ஆண்டில் 1000 பேரில் 6.77 என்ற அளவுக்கு இருந்துள்ளது. இதுவே 2021ம் ஆண்டு 7.52 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.