4 விண்வெளி வீரர்களுடன் பாதுகாப்பாக தரையிறங்கிய டிராகன் விண்கலம்!

டிராகன் விண்கலம், பசிபிக் பெருங்கடலை ஒட்டியுள்ள வடஅமெரிக்காவின் கலிபோர்னியாவின் நீண்ட கடற்கரையில் பாதுகாப்பாக தரையிறக்க திட்டமிடப்பட்டது,

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கடந்த ஜூன் 25ம் தேதி இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, பெக்கி விட்சன், திபோர்பு மற்றும் ஸ்லாவோஉஸ்னான் ஸ்கிவிஸ்னீவ்ஸ்கி ஆகிய 4 பெரும் புறப்பட்டு சென்றனர். அவர்கள் விண்வெளியில் பயிர்கள் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டனர்.

இதைதொடர்ந்து விண்வெளி நிலையத்தில் இவர்களின் 14 நாட்கள் ஆராய்ச்சிணி முடித்தது.  சுபான்ஷு சுக்லா உள்பட விண்வெளி வீரர்கள் 4 பேரும் நேற்று மதியம் 2 மணியளவில் டிராகன் விண்கலத்திற்குள்  சென்றனர். மேலும் விண்கலத்துடனான கேபிளை இணைத்து, தங்களுடைய புறப்பாட்டிற்காக தயாரானார்கள். தயாராகும் பணிகள் முடிந்து மாலை 4.35 மணிக்கு பூமியை நோக்கிய விண்கலத்தின் பயணம் தொடங்கும் என எதிர்பார்க்கபட்டது.

இந்நிலையில் டிராகன் விண்கலம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டு 4.45 மணியளவில் .எஸ்.எஸ்ல் இருந்து டிராகன் விண்கலம் பிரிந்தது. விண்கலத்திற்கும், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கும் இடையேயான பகுதி பாதுகாப்பாக மூடப்ப வேண்டும். அப்போதுதான் பயணம் மேற்கொள்ள ஏதுவாக அமையும். இதற்காக சிறிது நேரம் எடுத்து கொள்ளப்பட்டது.

22.5 மணி நேர பயணத்திற்கு பிறகு இன்று பகல் சுமார் 3 மணி அளவில் பூமியை வந்தடையும். டிராகன் விண்கலம், பசிபிக் பெருங்கடலை ஒட்டியுள்ள வடஅமெரிக்காவின் கலிபோர்னியாவில் நீண்ட கடற்கரையில் பாதுகாப்பாக தரையிறக்க திட்டமிடப்பட்டு இருந்தது. இதற்காக அமெரிக்க கடற்படையும் தயார் நிலையில் உள்ளது. இந்த சூழலில் சரியாக பிற்பகல் 3 மணியளவில் டிராகன் விண்கலம் 4 வீரர்களுடன் தரையிறக்கப்பட்டு உள்ளது

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.