நேதாஜி பிறந்த நாள் மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட மாபெரும் மாட்டு வண்டி பந்தயத்தில் 80-க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் கலந்துகொண்டு சீறிப்பாய்ந்தன.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே காடத்திவயல் கிராமத்தில் நேதாஜி பிறந்தநாள் மற்றும் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு முதலாம் ஆண்டு மாபெரும் மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இந்த இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தில் மதுரை, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் தங்களது இரட்டை மாட்டு வண்டிகளுடன் வந்து போட்டியில் கலந்துகொண்டனர்.
பெரியமாடு, சின்னமாடு, புதுப்பூட்டு என மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்த போட்டியில் 80-க்கும் மேற்பட்ட மாடுகள் மற்றும் வண்டி சாரதிகள் கலந்து கொண்டு நிர்ணயிக்கப்பட்ட பந்தைய இலக்கினை நோக்கி ஓடி ஒன்றையொன்று சீரிப் பாய்ந்து முந்திச் சென்றன. இந்த போட்டியில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்த மாட்டின் உரிமையாளர்களுக்கு ரூபாய் 2 லட்சம் ரொக்கப் பரிசும், கோப்பைகளும் வழங்கப்பட்டன. இந்த இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தை சாலையின் இருபுறங்களிலும் நின்று ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கண்டு ரசித்தனர்.
- பி. ஜேம்ஸ் லிசா








