“#VCK நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டிற்கும், அரசியலுக்கும் முடிச்சு போட வேண்டாம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டிற்கும், அரசியலுக்கும் முடிச்சு போட வேண்டாம் என்று திருமாவளவனே தெளிவாக விளக்கம் கொடுத்திருக்கிறார்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் அமெரிக்கா பயணத்தை…

“விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டிற்கும், அரசியலுக்கும் முடிச்சு போட வேண்டாம் என்று திருமாவளவனே தெளிவாக விளக்கம் கொடுத்திருக்கிறார்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் அமெரிக்கா பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு இன்று சென்னை வந்தடைந்தார். விமான நிலையத்தில் அமைச்சர்களும், திமுக நிர்வாகிகளும் வரவேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

கள்ளக்குறிச்சியில் அடுத்த மாதம் 2-ந் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மது மற்றும் போதைப்பொருட்கள் ஒழிப்பு மாநாடு நடைபெறுவது குறித்தும் இதில் பங்கேற்க அ.தி.மு.க.வுக்கு திருமாவளவன் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெளிவாக சொல்லிவிட்டார். அதற்குமேல் நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இது அரசியல் நோக்கத்துக்காக நடத்தப்படும் மாநாடு அல்ல. எல்லோருக்கும் தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்துள்ளேன். இது பொதுவான விஷயம். இதுக்கும் அரசியலுக்கு முடிச்சு போட வேண்டாம்னு திருமாவளவன் தெளிவாக சொல்லி இருக்கிறார். அதனைத் தான் நானும் சொல்கிறேன்” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.