முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

நீட் தேர்வு குறித்து பயம் வேண்டாம்; மாணவர்களுக்கு சீனு ராமசாமி அட்வைஸ் 

மாணவர்கள்  தற்கொலை  செய்து கொள்ள வேண்டாம் என இயக்குநர் சீனு ராமசாமி அறிவுறுத்தியுள்ளார். 
கடந்த ஜூன் மாதம் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த”மாமனிதன்” திரைப்படத்தை இயக்கிய சீனுராமசாமி, தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் இடிமுழக்கம் எனும் திரைப்படத்தை இயக்கிவருகிறார்.
இந்த நிலையில்  நேற்று சேலத்தில் பாரதி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற விழாவில் அவர் கலந்துகொண்டார். விழாவில்  “மாமனிதன்” என்ற பெயரில் அவருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.  சீனுராமசாமி பேசுகையில், துணிச்சலான படைப்புகளைத் திரையுலகிற்கு அளிக்கும் தற்போதைய இளம் இயக்குநர்களை நான் என் சமகால இயக்குநர்களாகவே பார்க்கிறேன் என்றார்.
தான் இயக்கிய மாமனிதன் திரைப்படம் பெரிய விளம்பரம் ஏதும் இல்லாமல் வெளியானது எனவும், 40% பார்வையாளர்களால் மட்டுமே திரையரங்கில் பார்க்கப்பட்டது ஆனால், தற்போது மாமனிதன்  ஆஹா ஓடிடி தளத்தில்  வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது எனவும் கூறினார்.
நிகழ்ச்சி முடிந்த பின் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இயக்குநர் சீனுராமசாமியிடம்,  “தமிழகத்தில் தற்பேது தொடர்ந்து வரும் மாணவர்களின் தற்கொலைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வரும் காலங்களில் உங்களிடம் இருந்து திரைப்படம் ஏதும் வெளிவருமா ? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
அதற்கு, “நீட் போன்ற தேர்வுகளால் மாணவர்கள் துவண்டுவிடக் கூடாது. மேலும் நாம் மாணவர்கள் மீது  குற்றம் சொல்லக் கூடாது. மாணவர்கள் தங்கள் கல்வி ஒன்றை மட்டுமே நம்பி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என நினைக்கின்றனர். அந்த கனவு ஈடேறாதபோது மாணவர்கள் தற்கொலை  செய்கிறனர். ஆனால், அதைத் தாண்டியும் வாழ்க்கை உள்ளது. அவர்களை வளர்த்த பெற்றோர்களுக்கு நிரந்தர சோகத்தை அவர்கள் ஏற்பத்திவிட கூடாது” என்றார்.
மேலும், “அப்படி தற்கொலை முடிவு எடுக்கும் மாணவர்கள், தங்கள் பெற்றோரை நினைத்துப் பார்த்து தற்கொலை எண்ணத்தைக் கைவிட வேண்டும். மருத்துவர் படிப்பு இல்லாவிட்டாலும் மருத்துவத் துறையிலேயே பல பிரிவுகள் உள்ளது. அவற்றைத் தேர்வு செய்து பின் தாங்கள் ஆசைப்பட்ட துறையை அடையும் வரை தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும்” என அறிவுறுத்தினார். மேலும் தன் படங்களில் தொடர்ந்து இதுபோன்ற சமூக கருத்துகளைத் தொடர்ந்து அனிச்சையாகவே கூறிவருகிறேன் என்றார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

5.5 லட்சம் இளைஞர்களின் திறனை மேம்படுத்த நடவடிக்கை- முதலமைச்சர்

G SaravanaKumar

போதைப் பொருள் வழக்கு: பிரபல நடிகருக்கு ஜாமீன் மறுப்பு

Halley Karthik

மதுரை ரயில் நிலையத்தை ரூ.358 கோடி மதிப்பில் புனரமைக்க ஒப்பந்தப்புள்ளி

Web Editor