முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

சமையல் சிலிண்டர் விலை உயர்வு: சென்னையில் ரூ.850-க்கு விற்பனை

நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் தொடர்ந்து இன்று முதல் சமையல் கேஸ் சிலிண்டர் விலையும் ரூ.25 உயர்ந்துள்ளது. இதனால் சென்னையில் சமையல் கேஸ் சிலிண்டர் ரூ. 850.50 காசுகளுக்கு விற்பனைச் செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100-க்கு விற்பனைச் செய்யப்பட்டுவரும் நிலையில் தற்போது சமையல் கேஸ் சிலிண்டர்களின் விலையும் உயர்ந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஊரடங்கில் உயரும் விலை

கொரோனா நோய்த் தொற்று காரணமாகக் கடந்த 15 மாதங்களாக குறு, சிறு மற்றும் சுய தொழில் நிறுவனங்கள் 73 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் மட்டும் சிறு நிறுவனங்களில் வேலை பார்த்துவந்த 59 சதவீத ஊழியர்கள் வேலையிழந்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஒரு வருடத்தில் வேலையின்மை 11.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. நகர் பகுதிகளில் 14.73 சதவீதமும், கிராம பகுதிகளில் 10.63 சதவீதமாகவும் வேலையின்மை அதிகரித்துள்ளது.

கொரோனா நோய் தொற்று காரணமாக வேலையிழந்து, வருமானம் இழந்து தவிக்கும் மக்கள் மத்தியில் தொடர்ந்து பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் ஆகியவற்றின் விலை உயர்வு அவர்களை மேலும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளியுள்ளது.

சமையல் சிலிண்டர் விலை விவரம்

இந்த வருட தொடக்கத்தில் சமையல் கேஸ் சிலிண்டரின் விலை ரூ.710 இருந்த நிலையில் பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் ரூ.735-க்கு விற்பனைச் செய்யப்பட்டது. அதே மாதத்தில் பிப் 15-ம் தேதி ரூ. 785-க்கும், பிப் 25-ம் தேதி 810-க்கு சிலிண்டர் விற்பனைச் செய்யப்பட்டது.

அதன்பிறகு மார்ச் மாதம் 1-ம் தேதி ரூ.835-க்கு விற்பனையான சிலிண்டர் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ரூ. 825-க்கு விற்பனைச் செய்யப்பட்டது. இந்நிலையில் ஒரு மாத கால இடைவெளியில் இன்று சமையல் கேஸ் சிலிண்டர் ரூ. 25. 50 காசுகள் உயர்ந்துள்ளது. இதன்காரணமாக டெல்லி மற்றும் மும்பையில் சமையல் கேஸ் சிலிண்டரின் விலை ரூ. 834. 50 காசுகளுக்கும், கொல்கத்தாவில் ரூ. 860.50 காசுகளுக்கும் சென்னையில் ரூ.850.50 காசுகளுக்கும் விற்பனைச் செய்யப்படுகிறது.

இந்த ஆண்டு 2021-யில் சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு பட்டியல்

மாதம்டெல்லி கொல்கத்தாமும்பை சென்னை
ஜனவரிரூ. 694ரூ. 720ரூ. 694ரூ. 710
பிப்ரவரி ரூ. 719ரூ. 745ரூ. 719ரூ. 735
பிப் 15-ம் தேதி ரூ.769ரூ. 795ரூ. 769ரூ. 785
பிப் 25-ம் தேதி ரூ.794ரூ.820ரூ. 794ரூ. 810
மார்ச் ரூ. 819ரூ. 845ரூ. 819ரூ. 835
ஏப்ரல்ரூ. 809ரூ. 835ரூ. 809ரூ. 825
மே ரூ. 809ரூ. 835ரூ. 809ரூ. 825
ஜூலைரூ. 834.50ரூ. 860.50ரூ. 834.50ரூ.850.50

Advertisement:
SHARE

Related posts

சுதந்திர தினம்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Saravana Kumar

போக்குவரத்து தொழிலாளர்களின் காலவரையற்ற போராட்டம் இன்று தொடங்கியது!

Gayathri Venkatesan

மோசடி வழக்கு: பிரபல நடிகையிடம் அமலாக்கத்துறை தீவிர விசாரணை

Halley karthi