பூனைக்கு பயந்து அடங்கி, ஒடுங்கி அமரும் நாய் – வைரலான அட்ராசிட்டி வீடியோ

சிறிய பூனைக்கு பயந்து பெரிய நாய் ஒன்று பயந்து, நடுங்கி தரையோடு தரையாக அமரும் வீடியோ ஒன்று தற்போது அதிகளவில் பலரால் ரசிக்கப்பட்டு வருகிறது. பூனைகளின் வெவ்வேறு கோமாளித்தனங்களைப் படம்பிடிக்கும் வீடியோக்கள் எப்போதுமே பார்ப்பவர்களை…

சிறிய பூனைக்கு பயந்து பெரிய நாய் ஒன்று பயந்து, நடுங்கி தரையோடு தரையாக அமரும் வீடியோ ஒன்று தற்போது அதிகளவில் பலரால் ரசிக்கப்பட்டு வருகிறது.

பூனைகளின் வெவ்வேறு கோமாளித்தனங்களைப் படம்பிடிக்கும் வீடியோக்கள் எப்போதுமே பார்ப்பவர்களை மகிழ்வித்து, சமூகவலைத்தளங்களிலும் வைரலாவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில், Reddit இணையதளத்தில் வெளியிடப்பட்ட வீடியோ ஒன்றில், ஒரு நாய் பூனைக்கு பயந்து அடங்கி, ஒடுங்கி தரையோடு தரையாக படுத்தமரும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகியுள்ளது.

அந்த வீடியோவில் சிறிய பூனை ஒன்று முதலாளி போல சோபாவில் அமர்ந்தபடி கீழே நின்று கொண்டிருக்கும் நாயை நோக்கி தன் பாதை நீட்டி அமர சொல்கிறது. உடனே அந்த நாயும் பயந்து, நடுங்கி பூனையின் சொல் பேச்சு கேட்டு தரையோடு தரையாக அமர்கிறது. பொதுவாகவே, நாய்க்கு பயந்து பூனைகள் ஓடும் விடியோக்கள் தான் அதிகளவில் சமூகவலைத்தளங்களில் பார்க்கக்கூடிய நிகழ்வாக இருந்து வரும் நிலையில், இந்த வித்யாசமான வீடியோ பலரது மனதையும் கவர்ந்து அதிகளவில் பகிரப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த வீடியோ அதிகப்படியான லைக்குலையும், ஷார்களையும் குவித்து வருகிறது.

[deleted by user]
by inAnimalsBeingJerks

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.