திண்டுக்கல் மாவட்டம், பழனி நகராட்சியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு
குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பழனி நகராட்சி சார்பில் “என் குப்பை எனது பொறுப்பு” என்ற பெயரில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்நிகழ்சியை, பழனி நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி கொடியசைத்து துவங்கி வைத்தார். நகராட்சி அலுவலகத்தில் இருந்து துவங்கிய பேரணியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.
மேலும், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்தல், வீட்டில் மக்கும் குப்பை மற்றும் மக்காத
குப்பை என தரம் பிரித்து வழங்குவது, சாக்கடைகளில் குப்பைகளை கொட்டுவது
ஆகியவை குறித்து விழிப்புணர்வு பதாதைகள் ஏந்தி சென்றனர். பழனி நகரின் முக்கிய
வீதிகளில் பேரணியாக சென்று, மீண்டும் பழனி நகராட்சியில் நிறைவடைந்தது. பேரணியில் , நகராட்சி ஆணையர் கமலா மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
—-கு.பாலமுருகன்







