மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு: 7 பேருக்கு தூக்கு

பிரபல மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் 7 பேருக்கு தூக்குத் தண்டனயும் 2 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வசித்து வந்த பிரபல…

பிரபல மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் 7 பேருக்கு தூக்குத் தண்டனயும் 2 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வசித்து வந்த பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா, கடந்த 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி கூலிப்படையால் வெட்டிக்கொல்லப்பட்டார். சொத்துக்காக நடந்த இந்தக் கொலை தொடர்பாக, சுப்பையாவின் மைத்துனர் மோகன் அளித்த புகாரில் அபிராமபுரம் போலீசார் வழக்குப் பதிவு விசாரித்தனர்.

பின்னர் இந்த வழக்குத் தொடர்பாக, ஆசிரியர்கள் பொன்னுசாமி, மேரி புஷ்பம், வழக்கறிஞர் பாசில், வில்லியம், மருத்துவர் ஜேம்ஸ் சதீஷ்குமார், பொறியாளர் போரிஸ், கூலிப் படையைச் சேர்ந்த ஏசுராஜன், முருகன், செல்வபிரகாஷ், ஐயப்பன் ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதில், ஐயப்பன் அப்ரூவராக மாறினார். கடந்த ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கின் தீர்ப்பை இன்று அறிவிப்பதாக சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி தெரி வித்திருந்தார்.

அதன்படி இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், பொன்னுசாமி, மேரி புஷ்பம், பஷில், போரீஸ், வில்லியம், யேசுராஜா, டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், முருகன், செல்வ பிரகாஷ் ஆகிய 9 பேரும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பின்னர் இவர்களுக்கான தண்டனை அறிவிக்கப்பட்டது. இதில் பொன்னுசாமி, பாசில்,
போரிஸ், வில்லியம், ஜேம்ஸ் சதீஷ்குமார், முருகன், செல்வபிரகாஷ் ஆகியோருக்கு தூக்கு தண்டனையும் தலா ரூ.50,000 அபராதமும் விதிக்கப்பட்டது. மேரி புஷ்பம் மற்றும் ஏசுராஜன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ50,000 அபராதம் விதிக்கப் பட்டது.

ஐயப்பன், அப்ரூவர் ஆகிவிட்டதால் அவர் அரசு சாட்சி என்பதால் அவருக்கு தண்டனை எதுவும் இல்லை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.