சந்திராயன் 3 நிலவில் தரை இறங்க உள்ள நிலையில் சந்திராயன் – 4 மூலம் நிலவில் தரையிரங்குவது மட்டுமில்லாமல் அங்கு உள்ள பொருட்களை பத்திரமாக எடுத்து வரும் வகையில் திட்டமிடப்படும் என இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கூறியுள்ளார்.
சந்திராயன் -3 நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் இடம் கரடு முரடான
இடமாக இருக்காத வகையில் திட்டமிட்டுள்ளோம் – எதிர்காலத்தில் சந்திராயன் 4 நிலவில் தரையிறங்குவதோடு மட்டுமல்லாமல் அங்கு உள்ள பொருட்களை பத்திரமாக எடுத்து வரும் வகையில் இஸ்ரோவின் திட்டம் அமையும் – இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை திருச்சியில் பேட்டி …
நிலாவும் – உலக அமைதியும் என்கிற தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி திருச்சி இந்திரா
காந்தி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் இஸ்ரோவில் முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் சிறப்புரை ஆற்றினார்.
முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மயில்சாமி அண்ணாதுரை பேசியதாவது :
நிலவில் முதலில் காலடி வைப்பது யார்? என்பதில் 1960களில் அமெரிக்க – ரஷ்யா இடையே பனிபோர் நிலவியது. கொலம்பஸ் இந்தியாவை கண்டுபிடிக்க வந்த போது எப்படி தெரியாமல் அமெரிக்காவை கண்டுபிடித்தாரோ அதே போல் இந்தியா நிலவு சார்ந்த ஆராய்ச்சியில் முதலாவதாக அமெரிக்கா கண்டுபிடிக்க முடியாத நீரையும் கண்டுபிடித்தது.
இந்தியா கண்டுபிடித்த மற்றொரு அமெரிக்கா தான் நிலவு – எப்படி அந்த
காலகட்டத்தில் அமெரிக்காவை புதிதாக பார்த்தார்களோ அது போல் வரும் காலத்தில்
நிலவை பார்க்கும் போது – இந்திய இளைஞர்களின் பங்களிப்பு நிலவு சார்ந்த
ஆராய்ச்சியில் அதிகம் இருக்கும்.
சர்வதேச விண்வெளி மையம் என்று இருப்பது போல் நிலவிலும் சர்வதேச விண்வெளி
ஆராய்ச்சி மையம் உருவாவதற்கான சாத்திய கூறுகள் உள்ளது. அப்பொழுது இந்தியாவும் அதில் பங்களிப்பை தரும் – இளைஞர்கள் அதற்கான பங்களிப்பை தர வேண்டும்.
வெப்ப மண்டலங்களான வளைகுடா நாடுகள் எண்ணெய் வளத்தால் மாற்றம் அடைந்து மனிதர்கள் வாழ்வதற்கான மாற்றம் உருவானது. அதே போல நிலவிலும் அந்த மாற்றம் நிகழலாம்.
நிலவை சந்திரயான் நெருங்கிக் கொண்டிருக்கிறது. நிலவைத் தாண்டி, தென் துருவத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். பல நாடுகளும் இதற்கான பயணத்தை தொடங்கியுள்ளனர். நிலவில் நீர் இருப்பதற்கான ஆதாரம் மற்றும் பிற மூலப் பொருட்களின் இருப்பு குறித்த நோக்கத்தில் இந்த பயணம் உள்ளது.
அறிவியல் அடுத்த கட்டமாக போவதற்கும், மனிதன் மீண்டும் நிலாவிற்கு செல்லும்
வகையில் இம்முயற்சி அமையும். நிலாவை, இந்தியா கண்டுபிடித்த இன்னொரு கண்டமாக நான் பார்கிறேன். இளைஞர்கள் இதில் ஆர்வம் காட்டினால் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மேலும் வளர்ச்சி அடையும்.
உலக அமைதிக்கான இடமாக நிலவு இருக்கும் – அதில் இந்தியா முன்னோடியாக விளங்கும். அனைத்தும் நல்ல படியாக உள்ளது – சந்திராயன் இறங்கக்கூடிய இடம் கரடு, முரடாக இல்லாமல் தரையிறங்க ஏதுவாக பார்த்துள்ளோம். சந்திராயன், லூனா 25 இவற்றிற்கிடையே போட்டி என்று சொல்ல முடியாது – கிட்டத்தட்ட இரண்டும் ஒரே மாதிரியான பயணத்தில் தற்போது உள்ளது.
கிட்டதிட்ட 1 கி.மீ தூரத்தில் சந்திராயான் – 3 மற்றும் ரஷ்யாவின் லுனா 25
இரண்டு லேண்டாரும் தரை இறங்க உள்ளது. இஸ்ரோவில் பயன்படுத்தப்படும் ராக்கெட்டின் வேகம் குறைவாக இருந்த போதிலும்,வெற்றி வாய்ப்பு சிறப்பாக உள்ளது.
எனவே தான் PSLV, GSLV ராக்கெட்டுகளை எல்லாவற்றிற்கும் பயன்படுத்துகிறோம்
என்றார்.







