இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியைப் பாராட்டிய கங்கனா ரனாவத்; ஏன் தெரியுமா?

கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபல பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி குறித்து ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.  பாலிவுட்டில் கேங்ஸ்டர் படம் மூலம் அறிமுகமானவர் கங்கனா ரனாவத். மிக குறுகிய காலத்தில் பாலிவுட்டின்…

கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபல பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி குறித்து ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். 

பாலிவுட்டில் கேங்ஸ்டர் படம் மூலம் அறிமுகமானவர் கங்கனா ரனாவத். மிக குறுகிய காலத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வரத் தொடங்கிய கங்கனா, தாம் தூம் படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமானார். அதேபோல், தெலுங்கிலும் கங்கனா ரனாவத்துக்கு பட வாய்ப்புகள் கிடைத்தன. சினிமாவை கடந்து அரசியல் ரீதியாக அடிக்கடி சர்ச்சையான கருத்துகள் கூறி ட்ரெண்டாகி வருகிறார் கங்கனா ரனாவத்.

இவர் தற்போது தமிழில் சந்திரமுகி 2 படத்தில் நடித்து வரும் கங்கனா, எமர்ஜென்ஸி என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில்,  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபல பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி குறித்து ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். அதில், “சஞ்சய் லீலா பன்சாலி ஒரு கலைஞனாக தனது வெற்றியையும் புகழினையும் தவறாக பயன்படுத்தியதில்லை. அவர் ஹிந்தி சினிமாவில் விரும்பியதை செய்யும் நல்ல மனிதர். சினிமாவின் மீதான காதலால் இயங்கி வருபவர்.
அவருடைய வேலையை மட்டுமே பார்ப்பவர். தீர்க்கமான சிந்தனை, நேர்மையான மனிதர்; வாழும் லெஜெண்ட். சில வருடங்களுக்கு முன்னர் எஸ்எல்பி தயாரிப்பில் இருந்து எனக்கு அளிக்கப்பட்ட பாடல் கதாபத்திரம் குறித்த வாய்ப்பினை சில காரணங்களால் மறுத்து விட்டேன். இருந்தும் அவரை சந்திக்கும்போது நன்றாக பேசுவார். கடவுள் தன் முன்னே சிரிப்பது போல கண்ணியமான சிரித்து பேசுவார். அவரது கண்களில் மரியாதை இருக்கும். குறைவான வார்த்தைகளையே பேசும் சஞ்சய் லீலா பன்சாலி அற்புதமான மனிதர்” எனக் கூறியுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.