அரசு முறைப்பயணமாக சிங்கப்பூர் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூக்கு மன்னார்குடியில் நினைவு சின்னமும், நூலகமும் அமைக்கப்படும் என்று அறிவிக்க காரணம் என்ன ? அது குறித்த செய்தியை பார்க்கலாம் …
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்காக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளூக்கு சென்றுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு பல்வேறு தொழில் நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளையும், சிங்கப்பூர் அமைச்சர்களையும் சந்தித்து , தமிழ்நாட்டின் தொழில் துறையில் சிங்கப்பூர் நிறுவனங்கள் முதலீடு செய்யுமாறு கேட்டுக்கொண்டார். மேலும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ,சென்னையில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.
அதையடுத்து சிங்கப்பூரில் உள்ள தமிழ் அமைப்புகள் இணைந்து நடத்திய தமிழ் கலாசார அமைப்பின் நிகழ்ச்சியில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், சிங்கப்பூருக்கும், தமிழ்நாட்டுக்குமான உறவு ஆயிரம் ஆண்டு பழமையானது எனக்குறிப்பிட்ட அவர், சிங்கப்பூரில் தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ பெரியாரின் சீடர் சாரங்கபாணியே காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் உரையாற்றுகையில், சிங்கப்பூரின் தந்தை மறைந்த லீ குவான் யூவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் நினைவுச்சின்னம், லீ குவான் யூ பெயரில் நூலகம் அத்துடன் திருஉருவச்சிலை அமைக்கப்படும் எனக் குறிப்பிட்டார்
சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்களில் பெரும்பான்மையாக, மன்னார்குடி, பட்டுக்கோட்டை பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.குறிப்பாக பரவாக்கோட்டை, கூப்பாச்சிக்கோட்டை, திருமக்கோட்டை, உள்ளிக்கோட்டை, மேலத்திருப்பாலக்குடி, கீழத்திருப்பாலக்குடி, ஆலங்கோட்டை நெடுவாக்கோட்டை, மேலவாசல் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து குறைந்தது, வீட்டுக்கு ஒருவராவது சிங்கப்பூரில் பணியாற்றுவார்கள் என்றார்.
மேற்கண்ட கிராமங்களில் இருந்து குறைந்தது, 2 தலைமுறையாக , வீட்டுக்கு ஒருவராவது சிங்கப்பூரோடு தொடர்புடையவர்கள், பணீயாற்றுவார்கள் அல்லது சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர்களாக இருப்பார்கள் என்றார்.
சிங்கப்பூர் தந்தை லீ குவான் யூ வால், தமிழர்களும் தமிழும் இங்கு உயர்வை அடைந்தது. பேரறிஞர் அண்ணாவின் பேச்சால் ஈர்க்கப்பட்ட லீ குவான் யூ. அண்ணாவை தனது மூத்த சகோதரர் என்று பாசத்தோடு குறிப்பிட்டார். அண்ணாவை அலுவலகத்திற்கு அழைத்து விருந்து கொடுத்தார். அதனால் தான் சிங்கப்பூரின் நாயகன் லீ குவான் யூ என அவரின் மறைவின் போது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறிப்பிட்டார்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள உள்ளிக்கோட்டை என்று ஊரை சின்ன சிங்கப்பூர் என்றே அழைப்பார்கள். குறிப்பாக இவ்வூரின் வாழ்க்கைத்தரம் உயர்ந்ததற்கு சிங்கப்பூர் ஓர் முக்கிய காரணமாகும். உள்ளிக்கோட்டை மற்றும் சுற்றுப்புற மக்கள் சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றி உள்ளனர். பெரும்பாலும் வீட்டிற்கு ஒருவர் சிங்கப்பூரில் பணி செய்கின்றனர்.
உள்ளிக்கோட்டை சின்ன சிங்கப்பூர் என்பர். இப்பகுதி மக்கள் வாழ்க்கைத்தரம் உயர சிங்கப்பூர் முக்கிய காரணம். உள்ளிக்கோட்டை சுற்றுப்புற மக்கள் சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றி உள்ளனர். பெரும்பாலும் வீட்டிற்கு ஒருவர் சிங்கப்பூரில் பணி செய்வார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர்களாக இருந்த அறிஞர் அண்ணா 1968 ஆம் ஆண்டும், கலைஞர் மு.கருணாநிதி 1998 ஆம் ஆண்டும் சிங்கப்பூர் சென்றனர். தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2023 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் பயணம் மேற்கொண்டுள்ளார்.











