சென்னையின் 2-வது விமான நிலையம் எது தெரியுமா?

சென்னை – பெங்களூரு நெடுஞ்சாலையில் சுங்குவார்சத்திரத்திலிருந்து 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பன்னூர், பரந்தூரை விடத் தூரம் குறைவாக இருப்பதால், அங்கு 2-வது விமான நிலையம் அமைய அதிக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. நாடு…

சென்னை – பெங்களூரு நெடுஞ்சாலையில் சுங்குவார்சத்திரத்திலிருந்து 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பன்னூர், பரந்தூரை விடத் தூரம் குறைவாக இருப்பதால், அங்கு 2-வது விமான நிலையம் அமைய அதிக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

நாடு முழுவதும் உள்ள பெருநகரங்களுக்கு 2-வது விமான நிலையம் தேவை என்பதைக் கருத்தில் கொண்டு சென்னையில் 2-வது விமான நிலையத்தை உருவாக்க நாங்கள் உறுதி பூண்டுள்ளதாக மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா அண்மையில் கூறியிருந்தார். அதில், ரூ.38,000 கோடி செலவில் டெல்லிக்கு அருகே இரண்டாவது விமான நிலையத்தை ஜிவாரில் கட்டி வருவதாகவும். அதேபோல, மும்பையில் இரண்டாவது விமான நிலையம் நவி மும்பையில் ரூ.17,000 கோடி செலவில் கட்டி வருவதாகவும் தெரிவித்த அவர், சென்னைக்கும் 2-வது விமான நிலையத்தைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அதற்காக 4 இடங்களை மாநில அரசு விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் பரிந்துரைத்துள்ளதாகத் தெரிவித்த அவர், மாநில அரசு தேர்வு செய்த அந்த 4 தளங்களிலிருந்து, நாங்கள் 2 தளங்களைத் தேர்ந்தெடுத்து, மாநில அரசின் பதிலுக்காகக் காத்திருக்கிறோம் என மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்திருந்தார். அதனைத்தொடர்ந்து, சென்னையின் 2-வது விமான நிலையம் எது? என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து வந்தது. இந்நிலையில், அதற்கான ஆலோசனை நாளை நடக்க இருக்கிறது.

அண்மைச் செய்தி: ‘நாளை வெளியாகிறது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் – அரசுத் தேர்வுகள் இயக்ககம்’

டெல்லியில் மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவை சந்தித்து, மாநில தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த ஆலோசனையில், அரசு அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர். பன்னூர் & பரந்தூர் ஆகிய இரு இடங்கள் இறுதியான நிலையில், பன்னூரை தேர்வு செய்ய அதிக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், இறுதிமுடிவு நாளைய ஆலோசனையில் தான் இறுதியாகும் எனக் கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.