முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி எவ்வளவு தெரியுமா?

நடப்பு ஆண்டில் தமிழ்நாட்டின் ஜிடிபி 14 சதவீதமாக இருக்கும் என்றும், 2030ம் ஆண்டில் தமிழ்நாடு ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார சக்தியாக மாறும் என்றும் சென்னை தொழில் வர்த்தக சபை தெரிவித்துள்ளது. இதுகுறித்த ஆய்வறிக்கையை விரிவாகப் பார்க்கலாம்.

கொரோனா பெருந்தொற்றுக்குப் பின் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி கடும் சரிவை சந்தித்து வருகிறது. இந்திய நாட்டில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என கூறப்பட்டாலும், அதன் தாக்கம் எதிரொலித்து வருகிறது. இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 2021ம் ஆண்டில் 8.3 சதவிகிதமாக இருந்தது. 2022ம் ஆண்டில் 7.7 சதவிகிதமாக குறைந்தது. நடப்பு நிதியாண்டான 2022- 2023ல் மேலும் சரிந்து 5.2 சதவிகிதமாகக் குறையும் எனவும் ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதேசமயம், தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சி தேசிய சராசரியைவிட மிக அதிகமாக உள்ளன. சென்னை தொழில் வர்த்தக சபையானது ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி நடப்பு நிதியாண்டில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 14 சதவீதமாக இருக்கும் என அறிவித்துள்ளது. ஆய்வறிக்கையை வெளியிட்டு பேசிய சென்னை தொழில் வர்த்தக சபையின் தலைவர் டி.ஆர்.கேசவன், கொரோனா பெருந்தொற்று காலத்தில் தமிழ்நாடு பின்னடைவைச் சந்தித்த போதிலும், மாநிலத்தின் மீள் தன்மை மற்றும் வலுவான பொது சுகாதார அமைப்பு மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாடுகளால் மற்ற மாநிலங்களை விட வேகமாக மீண்டு வந்ததாக தெரிவித்துள்ளார்.

 

தமிழ்நாட்டின் மொத்த உற்பத்தி வளர்ச்சி 2022ம் நிதியாண்டில் 14.6 சதவீதமாக உயர்ந்தது என்றும், நடப்பு நிதியாண்டில் ஜிஎஸ்டிபியின் வளர்ச்சி 14 சதவீதமமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். தொடர்ச்சியாக நடைபெற்று வரும் பணிகள், வலுவான பொருளாதார மற்றும் தொழில் துறை கட்டமைப்பால் தமிழ்நாட்டின் ஜிஎஸ்டிபி 2030ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் என்ற அளவை எட்டும். அப்போது தமிழ்நாட்டின் ஏற்றுமதியளவும் 300 பில்லியன் டாலர் மதிப்பை கொண்டிருக்கும் என்றும் டி.ஆர்.கேசவன் கூறியுள்ளார்.

நடப்பாண்டில் ஐம்பதாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டு திட்டங்களை தமிழ்நாடு ஈர்த்துள்ளது. 2021 ஜூலை முதல் 2022 மே மாதம் வரை  மொத்தம் 131 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதனால் இரண்டரை லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வேலைவாய்ப்பை பெறுவார்கள். ஏற்றுமதி நிறுவனங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்த 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு, அறிவுசார் நகரம் அமைத்தல் மற்றும் ஏற்றுமதியில் தமிழ்நாட்டை முன்னணியில் கொண்டு வர ஏற்றுமதி ஊக்குவிப்பு உத்தியை வெளியிடுதல் போன்ற பல்வேறு முயற்சிகளை மாநில அரசு மேற்கொண்டுள்ளது என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

எப்போதும் தடையின்றி தொடரும் பொருளாதார செயல்பாடுகளால் தமிழ்நாடு, இந்திய நாட்டிற்கே வழிகாட்டியாக உள்ளது என்றால் மிகையில்லை.

-ரா.தங்கபாண்டியன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

2-ம் தவணை கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்ட துணை குடியரசு தலைவர்!

G SaravanaKumar

சமய நல்லிணக்க மனித சங்கிலி – உயர்நீதிமன்றத்தில் இடதுசாரிகள், விசிக மனு

Jayakarthi

சைக்கிள் ஓட்டுதலின் 12 நன்மைகள் என்ன தெரியுமா?

Arivazhagan Chinnasamy