திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலில், கடந்த ஆகஸ்ட் மாத காணிக்கையாக, பக்தர்கள் 120 கோடியே 05 லட்சம் ரூபாய் செலுத்தியுள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் எப்போதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். பல மணி நேரம் காத்திருத்து பக்தர்கள் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வது வழக்கம்.
நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் திருப்பதி கோயிலுக்கு பக்தர்கள் நன்கொடையாக கோடிக்கணக்கான ரூபாய்களையும், தங்கம், வெள்ளி உள்ளிட்ட விலைமதிப்புடைய பொருட்களையும் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் திருப்பதி ஏழுமலையானை கடந்த மாதம் 22 லட்சத்து 25 ஆயிரம் பக்தர்கள் வழிபட்டுள்ளனர். மேலும் அவர்கள் கோயிலில் உள்ள உண்டியலில் 120 கோடியே 5 லட்சம் ரூபாயை காணிக்கையாக அளித்துள்ளனர். கடந்த மாதம் ஒரு கோடியே ஒன்பது லட்சம் லட்டுக்கள் விற்பனையாகி உள்ளன. மேலும் 43 லட்சத்து 7 ஆயிரம் பேர் தேவஸ்தானத்தின் அன்னதான கூடத்தில் கடந்த மாதம் சாப்பிட்டு உள்ளனர்.







