சந்திரமுகி 2 திரைப்படத்தில் எத்தனை பாடல்கள் தெரியுமா?

ராகவா லாரன்ஸ் நடிக்கும் ”சந்திரமுகி 2” படத்தில் மொத்தம் 10 பாடல்கள் இடம்பெற்றுள்ளதாக படத்தின் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி தெரிவித்துள்ளார். கடந்த 2005ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான திரைப்படம் சந்திரமுகி. மலையாளத்…

ராகவா லாரன்ஸ் நடிக்கும் ”சந்திரமுகி 2” படத்தில் மொத்தம் 10 பாடல்கள் இடம்பெற்றுள்ளதாக படத்தின் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி தெரிவித்துள்ளார்.

கடந்த 2005ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான திரைப்படம் சந்திரமுகி. மலையாளத் திரைப்படமான மணிச்சித்திரதாழ் திரைப்படத்தின் மறுஆக்கமாக உருவான சந்திரமுகி திரைப்படம் 200 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி பெரும் வெற்றி பெற்றதோடு வசூலையும் அள்ளி குவித்தது.

13 ஆண்டுகளுக்கு பிறகு சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார். மேலும் ராதிகா, வடிவேலு, லக்‌ஷ்மி மேனன், சிஷ்டி டாங்கே, ரவிமரியா என நட்சத்திர பட்டாளமே நடித்து வந்தனர். முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடிக்கிறார்.

லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஆஸ்கர் வென்ற எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். முதல் பாகத்தின் தொடர்பு இல்லாமல் உருவாகி வரும் இத்திரைப்படம் தெலுங்கில் வெளியான “நாகவள்ளி” திரைப்படத்தின் தழுவலாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

படப்பிடிப்பு நிறைவடைந்ததாக புகைப்படத்தை வெளியிட்டு படக் குழுவினர் அறிவித்தனர். அதன்படி, ”சந்திரமுகி 2” படம் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் முதல் பாடலான ”சுவாகதாஞ்சலி” பாடலை படக்குழு அண்மையில் வெளியிட்டது. இந்த பாடலில் ஒரு சில மேக்கிங் வீடியோ காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

https://twitter.com/mmkeeravaani/status/1691854990300643334?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1691854990300643334%7Ctwgr%5E8c4b82fae44c93fb313916a7cd3374677af754a1%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.dinamani.com%2Fcinema%2Fcinema-news%2F2023%2Faug%2F17%2Fchandramukhi-song-4056874.html

இந்நிலையில், படத்தின் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சந்திரமுகி – 2 படத்தில் எனக்கான இசைப்பணிகள் முடிந்தது. மீதமுள்ள 9 பாடல்களை வெளியிடுவதில் ஆவலுடன் இருக்கிறோம்’ என பதிவிட்டுள்ளார். ஆகமொத்தம் இந்த படத்தில் 10 பாடல்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.