அமெரிக்காவில் பிரதமர் மோடி தங்கியுள்ள ஹோட்டலின் சிறப்புகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

4 நாட்கள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு லோட்டே நியூயார்க் பேலஸ் ஹோட்டலில் தங்கியுள்ளார். அந்த நட்சத்திர ஹோட்டலின் சிறப்புகள் என்ன என்பது பற்றி இந்த செய்தி தொகுப்பில்…

4 நாட்கள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு லோட்டே நியூயார்க் பேலஸ் ஹோட்டலில் தங்கியுள்ளார். அந்த நட்சத்திர ஹோட்டலின் சிறப்புகள் என்ன என்பது பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்…..

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பின்பேரில் அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, இன்று முதல் வரும் 23-ம் தேதி வரை அமெரிக்காவில் தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். குறிப்பாக இன்று நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் நடைபெறும் சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்கும் மோடி நாளை வாஷிங்டன் சென்று அமெரிக்க அதிபர் பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் வெள்ளை மாளிகையில் அளிக்கும் விருந்திலும் கலந்து கொள்ள இருக்கிறார்.

மேலும், அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்திலும் உரையாற்றுகிறார். இதன் மூலம், அந்நாட்டு நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் இரண்டாவது முறையாக உரையாற்றும் முதல் வெளிநாட்டுத் தலைவர் என்ற பெருமையை மோடி பெறவுள்ளார். இதனை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அதில் இந்தியா-அமெரிக்கா இடையிலான தொழில், பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் இரு நாட்டு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார்.

இதற்கிடையில், நியூயார்க்கில் உலகின் பெரும் பணக்காரரும் ஸ்பேக் எக்ஸ் நிறுவன தலைவருமான எலான் மஸ்க்கை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் பிரதமர் மோடி இந்தியாவில் கணிசமான முதலீடுகளை செய்ய எலான் மஸ்க்கிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த நிலையில், அமெரிக்காவில் பிரதமர் மோடி தங்கியிருக்கும் நட்சத்திர ஹோட்டலின் சிறப்புகள் என்ன என்பதை பார்க்கலாம்…..

லோட்டே நியூயார்க் அரண்மனை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் :

ஹோட்டலின் வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின் படி Lotte New York Palace Hotel ஆனது நியூயார்க்கின் மிகவும் பிரபலமான மற்றும் முக்கியமான ஹோட்டலாகும். இது இரண்டு தங்குமிட அனுபவங்களை பயனாளர்களுக்கு வழங்குகிறது . ஒன்று அரண்மனை பாணியிலான வசதி மற்றொன்று டவர் பாணியிலான கட்டமைப்புடன் கூடிய வசதி.

1880-களில் அப்போதைய வடக்கு பசிபிக் ரயில்வேயின் தலைவரான ஹென்றி வில்லார்ட் என்பவரால் இந்த ஹோட்டல் கட்டப்பட்டது. 1874 இல், ஹென்றி வில்லார்ட், டெவலப்பர் ஹாரி ஹெல்ம்ஸ்லி என்பவரிடம் கொடுத்து, வில்லார்ட் ஹவுஸ் மாடலில் 55-அடுக்கு ஹோட்டலை கட்ட முன்மொழிந்தார். அதன்படி ஹோட்டல் கட்டுமான பணிகள் சுமார் 6 ஆண்டுகளாக நடந்து முடிந்து 1881 இல், இது ஹெல்ம்ஸ்லி அரண்மனையாக திறக்கப்பட்டது. ஹென்றி வில்லார்ட்டால் கட்டப்பட்ட இந்த நட்சத்திர ஹோட்டலானது 1882 ஆம் ஆண்டு முழுமை பெற்றது. அப்போது இவை வில்லார்ட் வீடுகள் என்று அழைக்கப்பட்டன.

563 அடி உயரத்தில், 51 மாடிகளைக் கொண்ட வானளாவிய ஐகானிக் ஹோட்டல் கட்டடமாகும். 1882 மற்றும் 1884 க்கு இடையில் ஒரு மைய வளாகத்தைச் சுற்றி ஆறு தனியார் வீடுகளின் தொடராக கட்டப்பட்டன. இந்த சொத்து 1943 ஆம் ஆண்டு வரை தனியார் குடியிருப்புகளாக பயன்படுத்தப்பட்டது, அது பெண்கள் இராணுவ சேவைகள் கிளப்பின் வீடாக மாறியது – இது இரண்டாம் உலகப் போரின் போது ஆயுதப்படைகளில் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்களுக்கு தங்குமிடத்தை வழங்கியது.

1992 வரை ஹெல்ம்ஸ்லியால் இயக்கப்பட்டது. மிகச்சிறப்பாக இயங்கிய இந்த ஹோட்டல் திவால் நடவடிக்கையின் காரணமாக, 1993 இல் புருனே சுல்தானுக்கு விற்கப்பட்டது , அவர் ஹோட்டல் மற்றும் வில்லார்ட் ஹவுஸை முழுமையாகப் புதுப்பித்தார். 2000 களின் பிற்பகுதியில் அரச குடும்பத்திடம் இருந்து புருனே அரசாங்கம் ஹோட்டலை எடுத்துக் கொண்டது.

பின்னர் அமெரிக்காவின் ரியல் எஸ்டேட் முதலீட்டு நிறுவனமான நார்த்வுட் இன்வெஸ்டர்ஸ், 2011ல் புருனே அரசாங்கத்திடம் இருந்து ஹோட்டலை வாங்கி புதுப்பித்தது. ஹோட்டல் மீண்டும் 2015 இல் கொரிய சொகுசு ஹோட்டல் ஆபரேட்டர் லொட்டே ஹோட்டல் & ரிசார்ட்ஸுக்கு விற்கப்பட்டது. அதற்கு பிறகுதான் இது லொட்டே நியூயார்க் பேலஸ் ஹோட்டல் என மறுபெயரிடப்பட்டது.

2021 ஆம் ஆண்டு நிலவரப்படி , ஹோட்டலில் 909 அறைகள் உள்ளன. இதில் 822 விருந்தினர் அறைகள், 87 தனி அறைகள். மாற்றுத்திறனாளி விருந்தினர்களுக்காக பிரத்யேகமாக 72 அறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 800-க்கும் மேற்பட்ட அறைகள் பட்டு கம்பள விரிப்பு வசதிகளுடன் உள்ளன. இந்த ஹோட்டலில் ஒரு இரவுக்கு ₹48,000 முதல் ₹12.15 லட்சம் வரை வாடகை வசூலிக்கப்படுகிறது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.