தமிழ்நாட்டில் மக்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு சில உணவுப்பொருட்களுக்கு தடை விதிக்கும் நடவடிக்கை என்பது கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் அதிக நிறங்களை பயன்படுத்தி விற்கப்படும் கலர் அப்பளத்தை பொதுமக்கள் உட்கொள்ள கூடாது என உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அடிக்கடி கலர் அப்பளம் சாப்பிட்டால் செரிமான பிரச்சனை, சிறுநீரக பாதிப்பு, புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

முக்கியமாக குழந்தைகள் இந்த கலர் அப்பளத்தை சாப்பிட்டால் அலர்ஜி மற்றும் கவன சிதறல் உண்டாகலாம் என்று அறிவுறுத்தியுள்ளது. பாரம்பரியமாக உளுந்து, அரிசி உள்ளிட்டவையில் தயாரிக்க கூடிய அப்பளத்தை வாங்கி சாப்பிட வேண்டும் என தெரிவித்துள்ளது. சந்தைகள், சுற்றுலா தளங்கள் மற்றும் பொருட்காட்சிகள் உள்ளிட்ட இடங்களில் கலர் அப்பளம் விற்பனை செய்ய வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் நிற மூட்டிகளை பயன்படுத்தி விற்கப்படும் கலர் அப்பளம் உயிருக்கு ஆபத்தை விளைவிக்க கூடும் எனவும் தமிழக உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.




