திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “ மறுக்கப்பட்ட உரிமைகளை வென்றெடுத்து மக்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்திய நமது திராவிட முன்னேற்றக் கழகத்தின் பயணம் 78-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
பேரறிஞர் அண்ணா விதைத்து – தலைவர் கலைஞர் வளர்த்து – நாம் காத்து நிற்கும் தமிழ்நாட்டின் தனித்துவத்தையும் வளர்ச்சியையும் பாழாக்கிட யாரையும் அனுமதியோம்!
மழையில் பிறந்து, புயல்களை வென்ற நாம், சமூகநீதி – சுயமரியாதை –
தமிழ்நாட்டின் உரிமை உள்ளிட்டவற்றில் சமரசமின்றிக் களத்தில் நிற்போம்! பயணத்தில் வெல்வோம்!” என்று தெரிவித்துள்ளார்.,




